வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

திருமகள் அட்டகம்



(இன்று (03.08.12) மூன்றாவது ஆடிவெள்ளியை முன்னிட்டு இந்திரன் அருளிய மகாலக்ஷ்மி அஷ்டகத்திற்கு எனது தமிழாக்கத்தைத் தருகிறேன்.)

வணங்குகின்றோம் மகாமாயா
     திருநிறையே தேவதேவியே
சங்குசக்கர கதைகரத்தாள்
     திருமகளே வணங்குகின்றோம்.   



வணங்கினோம் கருடவாகினி
     கோலாசுர மர்த்தினி
சகலபாவம் அழித்திடுவாள்
     திருமகளே வணங்குகின்றோம்.


சகலமறிந்தாள் சகலவரத்தாள்
     சகலதுஷ்டர் ஒடுக்கிடுவாள்
சகலதுக்கம் துடைத்திடுவாள்
     திருமகளே வணங்குகின்றோம்.



பலனுமறிவும் தந்திடுவாள்
    போகமோட்சம் கொடுத்திடுவாள்
மந்திரத்தின் பொருளுமாவாள்
     திருமகளே வணங்குகின்றோம்.




ஆதியந்தம் அற்றதேவி
     ஆதிசக்தி மகேஸ்வரி
யோகமகளே யோகப்பயனே
     திருமகளே வணங்குகின்றோம்.



தூலசூக்கும கோபக்காரி
     மகாசக்தி மாவயிறாள்
பெரும்பாவம் பொசுக்கிடுவாள்
     திருமகளே வணங்குகின்றோம்.



பத்மாசனம் வீற்றதேவி
     பரம்பொருள் வடிவுடையாள்
பரமேஸ்வரி உலகத்தாயே
     திருமகளே வணங்குகின்றோம்.



வெள்ளுடை தரித்ததேவி
     வெகுநகை அலங்காரி
எங்குமுள்ள உலகத்தாயே
     திருமகளே வணங்குகின்றோம்.



மகாலக்குமி அட்டகமிதை
     படித்திடும் பக்தரெல்லாம்
சர்வசித்தியும் பெற்றிடுவார்
     அரசபோகமும் உற்றிடுவார்.



ஒருகாலம் படித்தவுடனே
     பெரும்பாவம் நாசமாகும்
இருகாலம் படித்தாலோ
     தனதான்யம் பெருக்கமாகும்.



முக்காலமும் படிப்போர்க்கு
     எதிர்ப்பெல்லாம் விலகியோடும்
எக்காலமும் திருமகளே
     உடனிருப்பாள் வரத்துடனே.

-    பத்மன்

1 கருத்து:

  1. இந்தர உவாச ...
    நமஸ்தே மகாமாயே
    என்று ஆரம்பிக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தின் அருமையான மொழிபெயர்ப்பு

    பதிலளிநீக்கு