வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கீதை அந்தாதி

[இன்று (09.08.2012) கோகுலாஷ்டமி – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எனது இந்தக் கவிதையை வெளியிடுகிறேன்.]


வாழ்வெனும் போர்க்களத்தில் பார்த்தனாம் நாமெல்லாம்
சூழ்ந்திடும் இன்னல்கள் பார்த்ததும் சோர்வுற்றோம்
தாழ்ந்துநீ நில்லற்க தர்மமுன் பக்கமென்றே
தோள்தட்டும் ஈசன் மொழி.



மொழிந்தார் குருச்சேத்ர யுத்தக் களத்தில்
ஒழித்தான் அருச்சுனன் அச்சமும் பேடிமையும்
வில்லெடுத்தான் தொடுத்தான் வினைமுடித்தான் வீறுடனே
சொல்லிய கண்ணன் செயல்.



செயலதுவே யோகமெனச் செப்பினான் கண்ணன்
பயனதில் நாட்டம் தடுத்தான் – நடுநிலைப்
பண்பதனைப் போதித்தான் கீதையாம் நூலைப்
படித்திட மாண்புறும் வாழ்வு.

-    பத்மன்


4 கருத்துகள்:

  1. செயலதுவே யோகமெனச் செப்பினான் கண்ணன்

    கோகுலாஷ்டமி – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். அத்துடன் இன்றைய ஆடிக் கிருத்திகை வாழ்த்துகளும்.

      நீக்கு