செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பூத்த மரமொன்றின் புலம்பல்



நேற்றுதான் நான்மலர்ந்தேன்

நிலம்கரையத் தாயழுதாள்.



கருவிலே கலைத்திருக்க

கடினச்சித்தம் இல்லையாம்

உருவிலே வளர்ச்சிகண்டு

உருகியுருகி அழுதிட்டாள்.





பத்துமாத துன்பத்துக்கு

பருவம்தந்த சாபமென்றாள்

வித்தொன்று இதில்முளைக்க

விலையும்தர வேண்டுமென்றாள்.



பஞ்சென்றாள் நெருப்பென்றாள்

பட்டுச்சேலை முள்ளென்றாள்

அல்லலுற்று வாழ்வதற்கே

அவதரித்தோம் உலகிலென்றாள்.



என்னபாவம் செய்திட்டோம்?

ஏனிப்படிப் பிறந்திட்டோம்?

மாறாகநாங்களும் பிறந்திருந்தால்

மனிதகுலம்தான் என்னாகும்?

-    பத்மன்

6 கருத்துகள்: