வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

எப்படிப் புகழ்வேன்?



(அயல்நாட்டு இறக்குமதியான காதலர் தினத்தை ஆதரிக்காவிட்டாலும், ஆதிகாலம் தொட்டே, சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, மன்மதன்-ரதி, கிருஷ்ணன்-ருக்மணி என நீடித்துவரும் காதலை, கனிந்த அன்பை ஆதரிப்பவன். ஆதலினால் இந்தக் கவிதை.)



என்ன காதலியடி நீயெனக்கு?
சூரிய முகமென்றால்
சுடவா செய்கிறேன் எனச்
சிணுங்குகிறாய்.




சந்திர வதனமென்றால்
தேய்ந்து மறைவதென்
தேகம் என்கிறாயா எனத்
தேம்புகிறாய்.





கருநாகக் கூந்தலென்றால், என்
கூந்தலின் மணம் என்ன
கடும் விஷமா என
விசும்புகிறாய்.



எப்படித்தான் புகழுவதோ
எனத் திகைத்து நின்றால்,
புகழ வக்கற்ற காதலனே!
நீயென்ன புலவன் எனப்
புலம்புகிறாய்.
என்செய்வேன்?

-    பத்மன்

2 கருத்துகள்:

  1. நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை. சார் காதல்கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  2. உன்னைப் புகழ உலகின் அத்தனை மொழிகளிலும் வார்த்தைகளே இல்லை என்று அடித்து விடுமேன்!!!!

    பதிலளிநீக்கு