செவ்வாய், 22 ஜனவரி, 2013

முடியாத முடிவு



இந்த உலகம்
ஒன்றுமில்லாத ஒன்று
என்பதில் எனக்குத்
தெளிவான குழப்பம்.

உறுதியான சஞ்சலத்துடன்
அடைய விழைகிறேன்
இல்லாத இருப்பை.



அறியவொண்ணா அறிவைப்
பெறக் காண்பேனோ
காணவியலாக் காட்சியை?

பேசாத மொழியிலும்
ஓசையிலா இசையிலும் அது
உறைவதாக உணர்த்தப்படுகிறேன்.


தொடக்கத்தின் முடிவு
மரணத்தில் மறுவாழ்வா?
ஜீவிதத்தில் சமாதியா?

சந்தேகமான நம்பிக்கையுடன்
இணக்கமான முரண்.



-    பத்மன்

9 கருத்துகள்:

  1. ஒன்றுமில்லாமல் இருந்தே எல்லாம்
    மீண்டும் ஒன்றும் இல்லாமல்
    கருங்குழி (பிளாக் ஹோல்)உதாரணம்
    கரும்பலகையில் ஒன்றுமில்லை
    ஆனால் நாம் எழுதுகிறோம் -அழிக்கிறோம்
    ஒன்றுமில்லாமல் ஆகிறது
    ஒன்றுமில்லா வாழ்க்கை இறைவனால் எழுதப்பட்டு அழிக்கவும் படுகிறது
    அலகிலா விளையாட்டுதான்
    அகிலம் ஆரா

    பதிலளிநீக்கு

  2. தலைப்பு
    தகவல்
    அதன் " உள் "
    அதன் "உறை "
    எதிர் "மறை"
    எல்லாமே
    உம் "திரையிடா"
    அறிவுக்கு சாட்சி ..

    தெளிவான தெளிவே --உம்
    முடிவில்லா முடிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. எஸ்.ஆர். சேகர், திரு. ஆரா, திரு. எஸ். சுரேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நல்ல கவிதையைப் பாராட்டும் தங்கள் முடிவு, முடியாமல் தொடரட்டும்.

      நீக்கு
  3. ரசிக்க வைக்கும் குழப்பம் ...

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் அவனிடத்தில் சேர்வதனால் அவன் (பத்மன்) தானே முடிவு! "அனந்த "பத்மன் தானே முடியாத முடிவு?

    பதிலளிநீக்கு
  5. நன்றி குமார். உமது வரவு நற்கூடலுக்கு நல்வரவு.

    பதிலளிநீக்கு