செவ்வாய், 9 அக்டோபர், 2012

அழிவு



எங்களது உணவுப் பண்டங்களைக் குளிரூட்ட
ஓசோன் படலம் ஓட்டையாக்கி வருகிறது
நாங்கள் வாகனங்களில் விரைவதற்காக
பனிப்பாறைகள் உருகுகின்றன.


எங்கள் எரிபொருள் தேவைக்காக
மரங்கள் கரியாகி வருகின்றன.
நாங்கள் குடியிருப்புகளைக் கட்டுவதற்காக
வனங்கள் மொட்டையடிக்கப் படுகின்றன.


எங்களது உணவுத் தேவைக்காகவும்
இன்னபிற வசதிகளுக்காவும்
தினமும் மிருகங்கள் செத்துமடிகின்றன.


எங்களில் சிலரது சுயநலத்திற்காக
நாங்களும் கூடத்தான் மடிந்து மண்ணாகிறோம்.


அழிவு ஒன்றுதான் நிலைப் பேறுடையது
ஆனால் தவணை முறையில் வருகிறது.
வாழ்வு என்பது வேறோன்றுமில்லை
அழிவைச் சற்று ஒத்திப்போடுவது.



ஆயினும் எங்கள் அவசர யுகத்தில்
ஆசைகளின் பூர்த்திக்காக
வாழ்க்கை வசதிகள் என்ற பெயரில்
அழிவை நாங்கள் அருகழைத்துக் கொள்கிறோம்.

-    பத்மன்

4 கருத்துகள்:

  1. உண்மை வரிகள்...

    வேதனையளிக்கும் சம்பவங்கள்...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான நடையில், எளிய முறையில் பதிந்துள்ளாய் நண்பா. கவிதையின் உண்மை முகத்தில் அறைகிறது.

    பதிலளிநீக்கு
  4. "வாழ்வு என்பது வேறோன்றுமில்லை
    அழிவைச் சற்று ஒத்திப்போடுவது."

    உண்மையான வார்த்தைகள் . நல்ல ஒரு கவிதை

    பதிலளிநீக்கு