ஞாயிறு, 17 நவம்பர், 2013

அருள்வாய் சிவமே



                    
(இன்று – 17.11.2013 – திருக்கார்த்திகை தினத்தையொட்டி அண்ணாமலை அண்ணல் சிவபெருமான் குறித்த இந்தக் கவிதை)

பொய்யனாய் வாழ்ந்திடப் புரிந்தனையே அய்யனே
மெய்யாம்நீ என்னெஞ்சில் வாழ்ந்திடப் புரிகுவையே
பைய்யவென் பழவினைகள் போக்கி வுன்னருளால்
உய்யவழி செய்திடுவாய் உமாபதி சிவமே.

கற்றநூல் படிப்பும் கடைத்தேற்றம் காட்டிடுமோ?
பெற்றபெரும் செல்வமும் பேரின்பம் கூட்டிடுமோ?
உற்றவுன் னருளின்றி உறுவதேது நற்பயனே!
நற்றவமே நின்னினைப்பு நல்குவாய் சிவமே.

பெற்றதாய்நீ யெனக்கு உற்றதந்தை யும்நீயே
கற்றதோர் கல்விநீ கடிதுசேர் செல்வம்நீ
சுற்றுமுள வெல்லாம்நீ சுகமும்நீ துக்கமும்நீ
முற்றுணர்ந்தோர் முடிவான முழுமுதலாம் சிவமே.
-
- பத்மன்

1 கருத்து: