குறும்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறும்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

குறுந்தொகை குறும்பா – 7, 8




குறுந்தொகை குறும்பா – 7


எவ்வழி உறவோ நாமிருவர்?
செம்மண் பெய்த மழைநீர்போல்
கண்டதும் உள்ளம் கலந்தனவே.
-    பத்மன்





குறுந்தொகை குறும்பா – 8


குட்டிப் பாம்பு கடித்தது
கொம்பு யானை துடித்தது
அவள் பார்த்த நான்.
-    பத்மன் 

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

குறுந்தொகை குறும்பா – 6





பூக்களின் தேன்குடி வண்டே

பொய்யின்றி மெய்சொல்லு பூவையர்

கூந்தலைவிட மணமோ பூ?

-    பத்மன்

சனி, 11 ஆகஸ்ட், 2012

குறுந்தொகை குறும்பா – 5


சிறிய கொம்பில் பெரியபலா
கனத்தை தாங்காது விழுந்திடுமோ?
காதலில் பழுத்தவள் உயிர்.

-    பத்மன்

சனி, 4 ஆகஸ்ட், 2012

குறுந்தொகை குறும்பா - 4

மலர் போன்ற பார்வை
அம்பு போலப் பாய்ந்தது
பறவை ஓட்டிய குமரி.

- பத்மன்

வியாழன், 26 ஜூலை, 2012

குறுந்தொகை குறும்பா - 3

விந்தையே தலைவன் மார்பு
நினைத்தால் நோய் நீளுது
அணைத்தால் நோய் தீருது.

- பத்மன்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

குறுந்தொகை குறும்பா 2

கொண்டவன் சென்றான் வெளியூர்
கொண்டதோர் நோய்க்கு மருந்து
கொண்டவன் கொண்ட மார்பு.

   - பத்மன்

ஞாயிறு, 10 ஜூன், 2012

குறுந்தொகை குறும்பா 1




அருவி போன்ற அழகி 
குளிர் பார்வை வீசினாள்
பற்றி எரிந்தது நெஞ்சம்